டெல்லி: ஏப்ரல் 29-க்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான  ராகுல் காந்தி கூறி  உள்ளார்.

 மேற்குவங்கத்தில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையடுத்து,  “தேர்தல் கால நிவாரணம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதனால்,  ஏப்ரல் 29-க்குப் பிறகு எச்சரிக்கையாக இருங்கள் – பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயரும்.” என ராகுல்காந்தி கூறி  உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தல் காலம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. நீங்கள் பாருங்கள், ஏப். 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும்.

எரிபொருள் விலை குறைவாக இருந்தபோது அதன் லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டது. இப்போது எரிபொருள் விலை உயரும்போது, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு மோடி அரசு மெளனமாக இருக்கிறது.

மலிவாக இருக்கும்போது அரசு கொள்ளை அடிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதனை மக்கள் மீது சுமத்திவிடுகிறது” என ராகுல் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (ஏப். 29) நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதில், வெற்றி வாய்ப்புகள் எந்தெந்த கட்சிகளுக்கு இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், மேற்கு வங்கத்திற்கு மட்டும் நாளை 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்தன. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன

[youtube-feed feed=1]