பெங்களூரு

ர்நாடகா எம் எல் சி தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் (எம் எல் சி) தேர்தல் நடந்தது.   அனைத்து மாநிலங்களிலும் ஆளும் கட்சியே அதிக அளவில் வெற்றி பெறுவது வழக்கமாகும்.   ஆனால் தற்போதைய தேர்தலில் முடிவுகள் நேர்மாறாக இருந்துள்ளது.

இந்த எம் எல் சி தேர்தலில் பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  அதே வேளையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 11 இடங்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்கள் என மொத்தம் 13 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எம் எல் சி தேர்தலில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   இது கர்நாடக ஆளும் கட்சியான பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.