லக்னோ: உ.பி. மாநிலத்தில் கள்ளச்சாராயம் மூலம் கள்ளச்சாராயம் மூலம் 100 பேர் சாவுக்கு காரணமாக தலைமறைவு பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக உ.பி.யில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பலர் அடுத்தடுத்து இறந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் குடித்ததில் மட்டும்த  கடந்த 2 வாரங்களில் 100-க்கும் அதிக மானோர் இறந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது,  உ.பி. மாநிலம் அலிகாரில் பாஜக உறுப்பினர் ரிஷி சர்மா என்பர்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையல், ரிஷி சர்மா தலைமறைவானார். கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக  ரிஷி மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்,   தலைமறைவான ரிஷி சர்மா குறித்து  தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரிஷி சர்மா உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்ட எல்லையில்  போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.