புதுச்சேரி

நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது.  இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடும் ஊரடங்கு அமலாக்கப்பட்டது.

இதில் புதுச்சேரியும் ஒன்றாகும்.  இங்கு அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.   மேலும் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் மதுக்கடைகளும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  புதுச்சேரியில் இன்று 482 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிர் இழந்து 1,196 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7,546 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில்  நாளை முதல்  மதுக்கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.