கர்நாடகாவில் பா.ஜ. ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பெங்களூரு:

ர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்  என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பாஜக 104 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், ஜேடிஎஸ்கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜகதான் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 9 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை உள்ள நிலையில், பாஜக ஆட்சி அமைக்கும் என்பது மத்திய அமைச்சர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், கர்நாடகாவில் மக்கள் பாரதியஜனதா கட்சிக்கே வாக்களித்து உள்ளனர் என்றார். மேலும், காங்கிரஸ் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது என்றும், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியை பல சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்.

கர்நாடகாவில் ஜனநாயக முறைகளை பின்பற்றி ஆட்சி அமைக்க பாஜ முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும், அதன்படி நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரின் உறுதியான பேச்சு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BJP in Karnataka Will form the government: Union Minister Prakash Javadekar, கர்நாடகாவில் பா.ஜ. ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்