திருச்சி:

முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சுந்தர் என்பவர், நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகை ஒன்றின் புகைப்பட கலைஞைரை, தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுந்தர், எச்.ராஜாவின் சகோதரர் ஆவார்.

கும்பகோணம் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் கணக்காளராக  பணிபுரிந்து வந்தவர் சுந்தர்.  இவர் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் சகோதரர் ஆவார்.

கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது  போக்குவரத்து துறை அமைச்சராக தற்போதைய திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளாரும், திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான கே.என். நேரு பொறுப்பு வகித்தார்.

2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்தது.

இதற்கிடையே தஞ்சையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளரும், அண்ணா தொழிற்சங்க (அப்போதைய) மாவட்ட பொருளாருமான கோவிந்தராஜன் என்பவர் லஞ்சஒழிப்பு துறையில் கடந்த 2015 ம் ஆண்டு புகார் அளித்தார்.

அதில், “தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு, அப்போது கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன்,   வெங்கடாசலம் உள்ளிட்ட 19 பேர் மீது போக்குவரத்து கழகங்களின் வருவாய் சுமார் 32.84 லட்சம் ரூபாயை கையாடல் செய்துவிட்டனர்” என்று புகார் தெரிவித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ரிட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் நாகமுத்து, “கே.என். நேரு உள்ளிட்ட 19 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” என உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் போதே ராஜி என்பவர் இறந்துவிட்டார்.

இதற்கிடையே இவ்வழக்கில், அரசுபோக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்துவந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் உடன்பிறந்த இளைய சகோதரர் சுந்தரம், பொன்னுரங்கம், சுந்தரம், சிவக்குமார், அண்ணாத்துரை உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக லஞ்சஒழிப்புத்துறை சென்னை தலைமைக்கு கோவிந்தராஜன் புகார் அளித்தார்.

காரின் பேரில் இந்த நால்வர் மீதும் லஞ்சஒழிப்புத்துறை 6 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  லஞ்சஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு தனி நீதிமன்றத்தில் நேற்று  குற்றப்பத்திரிக்கை நகலை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து 21 பேரும் நீதிபதி சாந்தி முன்பு ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கே.என். நேருவை மீண்டும் ஏ1 ஆக இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கோவிந்தராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தார் சுந்தர்.  அப்போது அவரை படம் பிடித்த பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் மறஅறும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை தரக்குறைவாக பேசினார். மேலும் ஆவேசமாக அவர்களை நோக்கி வந்த சுந்தர், திடீரென புகைப்பட கலைஞர் ஒருவரை தாக்க முயற்சித்தார். அவரது புகைப்படக் கருவியையும்  பறிக்க முயற்சித்தார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஓய்வுபெற இருந்த சுந்தர், முந்தைய நாளான 30ஆம் தேதி இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ…