புதுசா வருது இன்னொரு இரட்டை இலை கட்சி

Must read

ரட்டை இலையுடன் ரோஜா பூவையும் வைத்து சின்னமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது புதிய கட்சி ஒன்று.

சுதேசி மக்கள் நீதி கட்சி என்ற பெயரிலான இந்த கட்சியின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

சுதேசி மக்கள் நீதி கட்சியின்   கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான கப்பல் கே.எஸ். ராஜேந்திரன், “ அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் சிறிய கட்சிகள் தோன்ற அவசியம் இல்லை. மக்கள் நலனே எங்கள் கட்சியின் கொள்கை. மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைப்போம். 2021-ம் ஆண்டு தேர்தலில், சுதேசி மக்கள் நீதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

அதென்ன பெயருக்கு முன்னாள் கப்பல்?

1996ல் கப்பல் சின்னத்தில் சுயேட்சையாக சிவகாசி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாராம் அதனால் பெயருக்கு முன்னால் கப்பல் ஒட்டிக்கொண்டதாம்.

“உங்கள் சின்னத்தில் இரட்டை இலையும் இருக்கிறதே” என்றால், “ரோஜா மலரைத்தான் சின்னமாக வைக்க நினைத்தோம். அதனோடு இரு இலைகளும் சேர்ந்துவிட்டன. (!) ஆகவே, இரட்டையிலையுடன் கூடிய ரோஜா என்பது எங்கள் சின்னமாகிவிட்டது. மற்றபடி யாரையும் காப்பி அடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்கிறார் ராஜேந்திரன்.

இறுதியாக அவர் சொன்னதுதான் ஹைலைட்:

“எங்களுக்கு 19 மாவட்டங்களில் 2.5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். விரைவில், தமிழக அரசின் சோம்பேறித்தனத்தை எதிர்த்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்துவோம்!”

நடத்துங்க.. நடத்துங்க..!

More articles

Latest article