ந்தியா, மத்தியப்பிரதேசம்

ரு இளம்பெண்ணைக் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகியின் மகன் ஆவார்.

மத்தியப் பிரதேசத்தின் தத்தியா மாவட்டத்தில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்  மற்றும் அவரது இளைய சகோதரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று இளம்பெண்ணை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் இளைய சகோதரியை அந்த கும்பல் தாக்கி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்ச்சியாக அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இச்சம்பவம் பற்றி உனாவ் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலாத்கார குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர் 2 மைனர் சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தப்பி ஓடிய மற்றொரு நபரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் அறிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களில் ஆளும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரின் மைனர் மகனும் உள்ளார். அந்த நபர் பெயர் முதல் தகவலறிக்கை. பதிவில் உள்ளது.

மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுரேந்திர புதோலியா

”நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாக்குமூலங்களை காவல்துறை இன்னும் பெறவில்லை. அவர் தனது வாக்குமூலத்தில் பா.ஜ.க. நிர்வாகியின் மகனின் பெயரை காவல்துறையினர் கூறினால், நிர்வாகிக்குக் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பின்னர் கட்சி சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் ”

எனக் கூறியுள்ளார்.