பிறந்த நாள்: சோனியாகாந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Must read

 
டில்லி,
   அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியுமான சோனியா காந்திக்கு  இன்று தனது 70-வது பிறந்தநாள்.
அதையொட்டி அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
சோனியா காந்தி  1946-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லுசியானாவில் பிறந்தார். இன்று அவருக்கு வயது 70.

பிறந்த நாளையொட்டி சோனியா காந்திக்கு, அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்  கூறி இருப்பதாவது:-
சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article