உலகெங்கும் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் அதேவேளையில், மின்சார வாகன பயன்பாட்டை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா வந்துள்ள உலகின் 7வது பணக்காரர் பில் கேட்ஸ் எலக்ட்ரிக் ஆட்டோ ஒட்டி மகிழ்ந்தார்.

மஹிந்திரா நிறுவனத்தின் ட்ரியோ வகை எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை பில் கேட்ஸ் ஒட்டிய வீடியோ-வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

மேலும், அடுத்த முறை பில் கேட்ஸ் இந்தியா வரும் போது பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் தான் ட்ரியோ ஆட்டோ ரிக்‌ஷா பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புவதாகப் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா-வின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]