தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிஹார் வேளாண்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

Must read

பீகார்:
பீகாரின் வேளாண் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரேம்குமார் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயா டவுன் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளரான பிரேம்குமார், பாஜக சின்னமான தாமரை அச்சிடப்பட்ட மஞ்சள் நிற முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த எதிர்கட்சிகள் அனைத்தும் அவருக்கு எதிராக திரும்பின, தற்போது பிரேம்குமார் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் தேர்தல் அதிகாரி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்குபதிவு தொடங்குவதற்கு 36 மணி நேரத்திற்கு முன்பே பிரச்சாரத்தை முடிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article