பாட்னா: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுயநினைவில்லா நோயாளியின் சிறுநீர் வெளியேறும் வகையில்,  சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டிலை பொருத்தி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024ம் ஆண்டு மாற்றத்தை தரப்போவதாக கூறி வரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நோயாளி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். அப்போது பரிசோதனை முடிந்து நோயாளிக்கு சிறுநீர் பையை பொருத்தும்படி செவிலியர்களுக்கு மருத்துவர் அறிவுறுத்தினார்.  ஆனால் மருத்துவமனையில் சிறுநீர் பை இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்கு பணியில் இருந்த செவிலியர்கள்,  சிறுநீர் பைக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டிலை இணைத்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள், இதுதொடர்பாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில்,  மறுநாள் காலை  நோயாளிக்கு சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. மருந்து தட்டுப்பாடு குறித்து தனக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை என மருத்துவமனை அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2024ம் ஆண்டு மத்திய அரசில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக சூளுரைத்து வரும் பீகார் முதலமைச்சரும், ஊழல்வாதியுமானதுணைமுதல்வரான தேஜஸ்வியும், முதலில் தங்களது மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள் என சமூக வலைதளங்களில் நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.