நான் யாருக்கும் டிஸ்லைக் கொடுத்தது இல்லை : தாமரைச்செல்வி

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில், நேற்றைய எபிசோடில் நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறி விட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து பேசிய கமல், நமீதா மாரிமுத்து இந்த வீட்டிலிருந்து வெளியேறியது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். அவரின் கதை என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.

இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அபிஷோக் ராஜா, இந்த வீட்டில் பிரியங்காவைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதுக்கு மேல பேசுனா ஃபீல் ஆய்டுவேன். என் அக்காத்தான் என்னை வளர்த்தா, அக்காவை அம்மானுத்தான் சொல்லுவேன். அக்கா திருமணமாகி போனபிறகு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியல. ஆனால் அதை நான் பெருசா வெளியில் காமிச்சிக்கல என்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே பேசினார்.

இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், கமல்,தாமரைச்செல்வியிடம் லைக் , டிஸ்லைக் எல்லாம் கொடுத்து உங்களுக்கு பழக்கம் வந்து விட்டதா என்கிறார். இதையடுத்து பேசும் தாமரைச் செல்வி, இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லீங்க சார், நான் குழந்தையில் எப்படி எல்லாம் இருக்கனும், சிரிக்கனும் விளையாடனும், ஓடனும்னு நினைச்சோனோ அது இங்கே நடந்துச்சு சார் என்றார். கொஞ்ச நேரம் நான் கோவமா இருந்தாலோ, மனசு சரி இல்லாமல் இருந்தாலோ, அண்ணாச்சி கூப்ட்டு கூப்ட்டு பேசுவார் அதனால அண்ணாச்சிக்கு லைக் என்றார். மேலும், சாமி சத்தியமா டிஸ்லைக் நான் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறுகிறார்.

மூன்றாவது ப்ரோமோவில் அனைவரும் ஒருவரை ஒருவர் விளையாட்டாக கிண்டலடித்து கொள்கிறார்கள் .

 

More articles

Latest article