ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரிப்பில் ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிஃப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.

லிஃப்ட் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் கவின் நடித்த லிஃப்ட் படத்திலிருந்து புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது.