‘பிக்பாஸ்’ அனிதாசம்பத் தந்தை: மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத், மாரடைப்பால் மரணம்.

Must read

சென்னை: மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத், மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவர் தற்போது தனியார் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அனிதா சம்பத்தின் தந்தையாவார்.
‘2021 ஆங்கிலப் புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாட கிடைத்த வாய்ப்பு’ என்று நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது என பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் தனது முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அனிதா சம்பத் நேற்றுதான் (ஞாயிற்றுக்கிழமை) பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, வீட்டுக்கு சென்ற நிலையில், சம்பத் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் பத்திரிகை டாட் காம் இணையஇதழில் ஏற்கனவே சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

More articles

Latest article