கவுகாத்தி:
பிரதமர் மோடி கொண்டுவந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடையை அடுத்து ஏற்ப்பட்ட கரன்சி பற்றாக்குறை நாடு முழுவதையும் பாதித்து இருக்கிறது. அசாம் மாநிலத்தில் பூட்டான் எல்லையை ஒட்டியுள்ள கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் இந்திய பணத்துக்கு பதிலாக பூட்டான் பணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

bhutan

இப்பகுதியில் பூட்டான் பணம் புழங்குவது சகஜம் என்றாலும் அது எல்லைக்கப்பால் நடக்கும் வர்த்தகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்தியாவுக்குள் இந்திய கரன்சிக்கு பதிலாக பூட்டான் கரன்சி பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. தாங்கள் பூட்டான் கரன்சியை பயன்படுத்த வற்புறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பழைய 500 ரூபாய்க்கு ஈடாக ரூ 400 மதிப்பிலான் பூட்டன் கரன்சி பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. பூட்டானிய பணம் 500 அதே மதிப்பில் இங்கு பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
கரன்சி தட்டுப்பாட்டினாலும், கூட்டத்தின் காரனமாக பணத்தை வங்கிகளில் மாற்றமுடியாமலும் தவிக்கும் தங்களுக்கு நடமாடும் ஏடிஎம்களை அரசு தற்போதைக்கு அமைத்து தந்தால் அது பேருதவியாக இருக்கும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வந்தடைந்தால் நிலமை மறுபடி சீராகும் என்று வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.