ஆத்தா படம் கைவிடப்பட்டதாக இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு….!

Must read

’ஆத்தா’ திரைப்படத்தை கைவிடுவதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா.

இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றன.

புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும்
என தெரிவிக்கப்படுகிறது” இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article