பெண்கள் தற்காப்பு கலையை தெரிந்து கொள்வதை விட, கண்ணியத்துடன் நடந்து கொள்வதே அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும்.

அஹிம்சை வழியில் கண்ணியத்துடன் செயல்படும் போது, உங்களை இம்சிப்பவர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்து விடும், பெப்பர் ஸ்பிரே வை விட சிறந்த ஆயுதம் அது, என்று தனது ட்விட்டரில் கமலஹாசன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிலளிக்கும் நெட்டிசன்கள் :

ஆண்கள் ஆண்களாக தான் இருப்பார்கள் பெண்கள் தான் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவது, குடும்ப மற்றும் பாலியல் வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும்

உங்கள் ஹீரோ எப்பொழுதும் ஹீரோவாகவே இருப்பார் என்று எதிர்பார்க்காதீர்கள், சில நேரங்களில் இது போல் பிற்போக்கு தனமாகவும் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள்

“பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்கள் வாயை மூடிகொண்டு இருப்பது தான் நல்லது என்பது என் கருத்து” என்று பெண்ணியவாதியான திவ்யா மருதையா காட்டமாக கூறியிருக்கிறார்.

“நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு புரிந்து தான் பேசுகிறீர்களா ? என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவர்களை காப்பாற்ற நான் எந்த எல்லைக்கும் செல்வேன், கண்ணியம் இரண்டாம் பட்சம் தான்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க அரசியல் காரணங்களுக்காக அஹிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்தி கூட, பெண்களுக்கு இதுபோல் மடமையை உபதேசிக்கவில்லை” என்று தமிழக காங்கிரஸ் பொது செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார்.

கமலஹாசன் தன் கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.