பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிப்பு

Must read

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்  முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை 20ந்தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்கு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணி மட்டுமின்றி எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. அங்கு  பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிட்ட நிலையில், பெண்களுக்கு இலவச நிதிஉதவி உள்பட பல்வேறு கவர்ச்சிகரமானஅறிவிப்புகளை ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், பஞ்சாப் சங்குரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 இலவசம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் வியூகம்…

 

More articles

Latest article