சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திரத்தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுப்பட்டது. முதலாக கடந்த  2013 – 14ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, முதல் மாநகராட்சிahf  சேலம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்டவைகளுக்கு, சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுககளுடன் பண முடிப்பும் வழங்குகிறார். அதன்படி,

சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் மற்றும் விருது அந்த மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. 

சிறந்த நகராட்சிக்கான விருது ஊட்டி நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், விருதும் வழங்கப்படுகிறது.

2-ம் இடமாக திருச்செங்கோடு நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 லட்சம்-விருது வழங்கப்படுகிறது.

3வது இடத்துக்கான பரிசு சின்னமனூர் நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு ரூ.5 லட்சம்-விருது வழங்கப்படுகிறது.

சிறந்த பேரூராட்சியாக  திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம்-விருது,

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிக்கு 2-ம் பரிசாக ரூ. 5 லட்சம்-விருது,

3-ம் பரிசாக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சம் பரிசு-விருது வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் நகர மாநகராட்சி 19.02.2014 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த அறிவிப்பில் 1 டவுன் பஞ்சாயத்து மற்றும் 11 கிராம பஞ்சாயத்து ஆகியவை தஞ்சாவூர் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.. மொத்த பரப்பளவு 3,51,655 மக்கள்தொகையுடன் 128.02 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளது.