பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி, காவல்துறையில் புகார் கொடுக்க வந்த நிலையில், அவருக்கு  உதவுவதாக கூறி, காவல் துறையினர் அந்த சிறுமியை மேலும் பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னமாக்கி உள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.

முதல்வர் சித்தராமையான தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநில தலைவர், பெங்களூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வது சிறுமிக்கு உதவுவதாக கூறி, அந்த சிறுமியை பல காவல்துறையினரே  பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வேலியே பயிரை மேய்ந்த கொடூரத்தில் ஈடுபட்ட போலீசாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் .

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை திருமணமான நபர் விக்கி. அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அந்த சிறுமியை  திருமணம் செய்துகொளவ்தாக, கூறி கடந்த ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். ஆனால், அந்த டீனேஜ் சிறுமி, தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய நிலையில், அவர் அதை தட்டிக்கழிக்கவே, சந்தேகம் அடைந்த சிறுமி,  தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய்  பெங்களூரு பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் காவலர் அருண் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். விசாரணை என்ற பெயரில், அந்த சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்த அருண், 2024 டிசம்பர் மாதம்,  அச்சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று, போதைப்பொருள் கலந்த மதுவை குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு வாரத்திற்க்கு மூன்று முறை இதேபோலே மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய நண்பர்களுக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரிடம் தகராறு செய்ய,  சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கி விடுவேன் என்றும் கான்ஸ்டபிள் அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனை தாயிடம் அச்சிறுமி தற்போது கூறிய நிலையில், தாயார் அளித்த புகாரின் பேரில் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் அருண் மற்றும் பக்கத்து வீட்டு விக்கி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு எந்த காவலர்கள் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.