பெகாசஸ் விவகாரத்தில் அடுக்கட்ட நடவடிக்கை: எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

Must read

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் அடுக்கட்ட நடவடிக்கை குறித்து  எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெகாசஸ் ஸ்பைவர் மூலம் ஒட்டுக்கேட்பு விவகாரம். இந்தியிலும் எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள என  300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுகேட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுக்கேட்பு நடவடிக்கையை மத்திய பாஜக அரசுதான் மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைககளிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் உச்சநீதிமன்றமும் வரும் 5ந்தேதி விசாரணை நடத்தஉள்ளது.

இந்த நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆலோசனை நடத்துகிறார்.

ராகுல் காந்தி தலையேற்று  நடத்தும்  இந்த ஆலோசனை கூட்டம்  டெல்லி அரசியல் சாசன கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article