சென்னை

ரும் 2027ஆம் வருடம் சென்னை மெட்ரோ ரயில் தனது சேவைகளை ஐ டி நூறுவனப்பகுதிகளில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் என்பது விரைவான போக்குவரத்து அமைப்பாகும்.  கடந்த 2015 ஆம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சிறிய பகுதியை இணைக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் சேவையை இது தொடங்கியது. பிறகு அதன் கட்டம் I திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து முக்கிய போக்குவரத்து மையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், CMBT மற்றும் சென்னை விமான நிலையம் ஆகியவை இணைக்கப்பட்டது

தினசரி இந்த அமைப்பு சராசரியாக சுமார் 1.15 லட்சம் பயணிகளைக் கொண்டு செல்கிறது, நெரிசல் நேரங்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு ரயில் விடப் படுகிறது. இந்நிலையில் சென்னை நகரின் வடக்குப் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பயணிகளின் நடமாட்டத்தை மேம்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

தற்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் சிறு சேரி சிப்காட் முதல் மாதவரம் வரையிலான 45.4 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.  இது ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள சிறு சேரி உள்ளிட்ட பகுதியில் நிறுவப்பட உள்ளது.   வரும் 2027ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முடிவடைந்து சென்னை ஐடி நிறுவனங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.