மும்பை: வெளிநாட்டிற்கு பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

கடந்த 2009 – 2015 காலகட்டத்தில், சுமார் ரூ.2000 கோடி வரையிலான பணப் பரிவர்த்தனையை, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி மேற்கொண்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.

எனவேதான், தற்போது அதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள செயலாக்க இயக்குநரகத்திற்கு(Enforcement Directorate) உத்தரவிட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள், இந்த விஷயத்தில் தங்களுக்கு விசாரணையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமென நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், அதை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.