கொல்கத்தா:

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி எப்படி செயல்பட முடியும் என கேள்வி எழுப்பி புகார்கள் தரப்பட்டுள்ளன.


இந்திய கிரிக்கெட் வாரிய புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி டிகே ஜெயின் முன்பு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் ரஞ்சித் சீல் மற்றும் பஸ்வதி சண்டுகா என்ற 2 பேர் புகார் அளித்தனர்.

அதில், வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். இந்த பதவியில் இருந்துகொண்டே,டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

எந்த அடிப்படையில் அவர் இரு பொறுப்புகளிலும் செயல்படுகிறார். இதனால் ஒரு சார்பு நிலையே ஏற்படும்.

ஏப்ரல் 12-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடக்கிறது.

அவர் கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு, டெல்லி கேபிடல்ஸ் அணியோடு அமர்ந்திருந்தால் முரண்பாடாக இருக்கும் என்பதை, முன்னரே இ-மெயில் மூலம் விசாரணை குழுவுக்கு புகார் கொடுத்துள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.