ன்னியாகுமரி

ன்னியாகுமரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திற்பரப்பு அருவியல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.  எனவே பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14-ந்தேதி திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டியதால் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும்  அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே திற்பரப்பு அருவியில் மீண்டும்  தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.