வங்கி அதிகாரிகள் தேர்வு குழுவை கலைக்க மத்திய அரசு முடிவு

Must read

டில்லி:

வங்கிகள் வாரியம் பணியாகக் குழு (பிபிபி) 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அரசு வங்கிகளின் ஆளுமைத் திட்டத்தை மேம்படுத்தவும், முக்கிய வங்கிகளின் தலைமை நிர்வாகி நியமனங்களில் அரசுக்கு உதவும் நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் தலைவராக முன்னாள் சிஏஜி வினோத் ராய் நியமனம் செய்யப்பட்டார். இதில் நிதியமைச்சக நிதியக சேவைகள் துறை செயலாளர், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் மற்றும் மூத்த வங்கி நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

எஸ்பிஐ தலைவராக இருந்த அருந்ததி பட்டாச்சார்யா கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இவருக்கு பதிலாக இ ந்த பதவிக்கு ரஜினிஷ்குமாரை கடந்த ஜூலை மாதம் பிபிபி தேர்தவு செய்தது. ஆனால், இந்த அறிவிப்பை மத்திய அமைச்சரவையின் நியமன குழு அக்டோபர் 4ம் தேதி அறிவித்தது.

இதே வங்கியின் மேலாண்மை இயக்குனர் பதவிக்கான நபரை பிபிபி தேர்வு செய்து முடித்துவிட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதை தவிர பிபிபி பெரிய அளவில் நியமனங்கள் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் பிபிபி தலைவர் விநோத் ராய் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. வங்கிகளுக்கு அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர்கள் வரை தரமான மனித வள ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிபிபி நிறைவேற்றவில்லை என்ற தகவல் வெளியாகவுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் நடந்த மோசடி இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமை ந்துள்ளது. அதோடு வினோத் ராய் இடத்தை நிரப்ப தகுதியான நபரை தேர்வு செய்ய முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. அதனால் பிபிபி அமைப்பை கலைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More articles

Latest article