டில்லி

ங்கிக் கடன் தள்ளுபடி பாரபட்சமாக நடப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் கூட்டம் நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடந்தது.  இந்த விவாதத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உரையாற்றினார்.    அவர் தனது உரையில் தெரிவித்ததாவது :

”டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு ஏலத்தில் வென்றுள்ளது. ஆனால் டாடா ரூ.2,700 கோடி தான் பணமாகச் செலுத்துகிறது.  மேலும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் டாடா நிறுவனத்தின் பெயரும் தென்படுகிறது,   டாடா நிறுவனம் அந்த 2700 கோடி ரூபாய் பணமும் அரசிடமே பெற்று அரசுக்கே திருப்பி வழங்குகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

வங்கி திவால் சட்டத்தின் மூலம் வங்கிகளில் மக்களின் பணமானது செட்டில்மென்ட் என்ற பெயரில் பெருமளவு மோசடி செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.  வங்கிகள் ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்குக் கடன் விவகாரத்தில் 50% தள்ளுபடி, ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும் அலோக் நிறுவனத்திற்கு 83% தள்ளுபடி என பல நிறுவனங்களுக்குப் பெருமளவு சலுகைகள் வழங்குகின்றன. அவ்வாறு திவால் நிலைக்கு அறிவிக்கப்பட்ட பல நிறுவனங்களை அதன் உரிமையாளரே வேறு பெயரில் மீண்டும் திரும்ப பெறுகின்றனர்.  

இவ்வரிசையில் சிவா நிறுவனம் கிட்டத்தட்டக் கடன் நிலுவையில் 95% தள்ளுபடி  பெற்றுள்ளது. இதில் தேசிய நிறுவன சட்டத்  தீர்ப்பாயமே தலையிட்டு எப்படி இவ்வளவு சலுகைகள் வழங்க உள்ளீர்கள் என வினவியுள்ளது.  இந்நிலையில் சிவா நிறுவனத்தை மீண்டும் சிவாவின் தந்தையே ஏலத்தில் எடுத்துள்ளார். மத்திய அமைச்சகம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமா?  

மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெறும் கடன்களுக்கு 10 சதவீதம் கூட தள்ளுபடி கிடைப்பதில்லை. ஆனால் அவர்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் ஒட்டச் செய்து அவர்கள் அவமானப்படுத்தப் படுகிறார்கள்.”

எனத் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.