ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

Must read

மும்பை:
விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

விஜய் ஹசாரே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்து மகாராஷ்டிரா அணி சண்டிகர் அணியை வெற்றி கொண்டபோதும் விஜய் ஹசாரே தொடரில் டி பிரிவில் நாக் அவுட்டில் தகுதி பெற முடியவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட் 136, 154, 124 ரன்கள் குவித்து ஹாட்ரிக் சதம் அடித்துள்ளார். இந்த சீசனில் ருதுராஜ் 603 ரன்கள் குவித்து 150.75 சராசரி ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

More articles

Latest article