கடந்த 2018-19-ம் ஆண்டில் வங்கி மோசடி ரூ. 71 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

Must read

புதுடெல்லி:

கடந்த 2018-19-ம் ஆண்டு வரை வங்கி மோசடி  ரூ. 71 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ. 41 ஆயிரத்து 167 கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்தது. இது தொடபாக 5,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2018-19-ம் ஆண்டில் ரூ.71 ஆயிரத்து 542 கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 6,801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டைவிட வங்கி மோசடி 73% அதிகரித்துள்ளது.

ஜுவல்லரி, உற்பத்தித்துறை, விவசாயம், ஊடகம்,விமான சேவை, சேவை மற்றும் திட்டம், காசோலை, வர்த்தகம், தகவல் தொழில்நுப்டம், ஏற்றுமதி வர்த்தகம், வைப்பு நிதி, கடன் ஆகிய துறைகளில் வங்கி மோசடி அதிகம் நடக்கிறது.

பெரிய அளவிலான வங்கி மோசடிகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article