ஆகஸ்டு 1ம் தேதி பக்ரீத் பண்டிகை! தமிழக தலைமை காஜி அறிவிப்பு

Must read

சென்னை:
மிழகத்தில் ஆகஸ்டு  1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பக்ரீத் பண்டிக்கைகான பிறை தெரியாததால்,  தமிழகத்தில் ஆகஸ்டு 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜூலை மாதம் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வியாழக்கிழமை ஆங்கில மாதம் ஜூலை 23 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தேதி, சனிக்கிழமை கொண்டாடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article