Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

நாளை பக்ரீத் பண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Jul 31, 2020

சென்னை:

தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்,  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைப் பணிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இறைத்தூதர் இப்ராஹிம், இறைவனின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்தார். இறைவனுக்காக தன்னுடைய மகனையே இழக்க முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாகத்தையும் இறை பக்தியையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இனிய நாளில், திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று தெரிவித்து, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post navigation

இந்தியாவை பாதுகாப்போம்! ஆகஸ்டு 8ந்தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு…
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer