சென்னை:
ந்தியாவை பாதுகாப்போம்! என ஆகஸ்டு 8ந்தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு அனைத்து  தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
மோடி தலைமையிலான மத்தியஅரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் நாடுதழுவிய போராட்டத்துக்கு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து தொழிற்சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தொழிலாளர் உரிமைகளை பறிக்கிற மக்களின் வாழ்வாதாரங்களை நொறுக்குகிற, தேசத்தின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், விற்கிற, சர்வாதிகார ஆட்சி நடத்துகிற மத்திய மாநில அரசுகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று  தமிழகத்தில் எடுக்க வேண்டிய இயக்கங்களை தட்டமிட அனைதுத மத்திய மாநில தொழிற்சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம் ஜூலை 29ந்தேதி அன்று மாலை 4.30 மணிக்கு தொமுக பொதுச் செயலாளர் தோழர் மு.சண்முகம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வே.சுப்புராமன், கி.நடராஜன் (என்பிஎஃப்), டி.எம்.மூர்த்தி, ம.ராதாகிருஷ்ணன் (ஏஐடியூசி), க.அ.ராஜா ஸ்ரீதர், மு.சுப்பிரமணியன் (எச்எம்எஸ்),  கே.ஆறுமுகநயினார், கே.சி.கோபிகுமார் (சிஐடியூ), டி.வி.சேவியர் (ஐஎன்டியூசி), வி.சிவகுமார், சொ. இரணியப்பன், (ஏஐடியூசி), ச.மாயாண்டி (டியூசிசி), ஆவடி அந்திரிதாஸ் (எம்எல்எஃப்), எஸ்.ரத்தினவேலு (டபிள்யுபிடியுசி) ஜி. முனுசாமி (எல்டியூசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதை நிலைமை, தொழிற்துறை பாதிப்பு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, ஆகஸ்டு 8ந்தேதி  மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.