டில்லி

குஜன் சமாஜ் கட்சி தனது வங்கிக் கணக்கில் ரூ.670 கோடி வைத்துள்ளது.

                               ரூபாய் நோட்டு மாலை அணிந்த மாயாவதி

அரசியல் கட்சிகள் தங்களின் வரவு செலவுக் கணக்குகள் மற்றும் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும்.   அதன்படி அனைத்து கட்சிகளும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தங்களுடைய வருட வருமானம், செலவு, வங்கி இருப்புத் தொகை, கையிருப்பு ரொக்கம் ஆகியவைகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி வருகின்றன.

அவ்வகையில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக அளவில் வங்கியில் இருப்பு வைத்துள்ள கட்சியாக சாதனை படைத்துள்ளது.   கடந்த 2014 ஆம் வருடம் இந்த கட்சி அளித்த கணக்குப்படி வங்கியில் குறிப்பிடும் படி தொகை இல்லை எனவும் கையிருப்பு ரொக்கமாக ரூ.95.54 லட்சம் மட்டுமே உள்ளதாக அறிவித்துள்ளது.   தற்போது வங்கிக் கணக்கு இருப்பு தொகையில்  முதலிடம் பிடித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியான சமாஜ்வாதி கட்சி ரூ.471 கோடி வங்கிக் கணக்கு இருப்புத் தொகையுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.   பகுஜன் சமாஜ் கட்சிக்கு டில்லியில் 8 வங்கிகளில் வங்கிக் கணக்குகள் உள்ள நிலையில் சமாஜ்வாதிக் கட்சிக்கு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன

மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.   அகில இந்திய கட்சியாகவும் நாட்டில் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது.   ஆனால் அந்த கட்சியின் வங்கி கணக்குகலில் ரூ.196 கோடி மட்டுமே இருப்பில் உள்ளது.

மாநில கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடி இருப்புடன் நான்காம் இடத்தில் உள்ளது.   ஐந்தாம் இடத்தில் ரூ. 83 கோடியுடன் உள்ள பாஜக  இன்னும் தன்னிடம் உள்ள தேர்தல் பத்திரங்களை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.  எனவே அது குறித்த விவரங்கள் கிடைத்த பிறகே பாஜகவின் நிலை சரிவர தெரிய வரலாம் எனக் கூறப்படுகிறது.