இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘பேச்சிலர்’ படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார்.

நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தை ‘ராட்சசன்’ தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது படக்குழு, பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘பேச்சிலர்’ படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.