செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள

இந்தப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து பேசியுள்ளார் சசிகுமார்.

வரும் நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப்படத்தின் பத்திரிகையாள்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். ‘நீ என்ன வேண்டுமானாலும் பண்ணு. ஆனால், படம் மட்டும் தயாரிக்காத’ என்று ரஜினி சார் சொன்னார். அவர் கூறியதை நான் அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது கேட்கிறேன். படம் தயாரிப்பில் உள்ள கஷ்டங்களை நான் பார்த்துள்ளேன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் சசிகுமார்.