நடிகர் பார்த்திபனின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இன்று தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன்,

“என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என்று கூறியுள்ளார்.