டில்லி,
டில்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடியுடன் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். இதன் காரணமாக டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழக இல்லத்தில் அவர் தங்கி உள்ளார்.
இதற்கிடையில் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் அவரை சந்திக்க இருந்து தமிழ்நாடு இல்லம் நோக்கி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி சென்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பயிர் கடன் உள்ளிட்ட கோரிக்கை பற்றி வலியுறுத்த உள்ளனர்.
முதல்வர் தங்களை சந்திக்க மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு சந்தித்திதுப் பேசினார்.
அப்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி, தென்னிந்தி நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்படுமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.