டெல்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல் அயோத்தியில் உள்ள புனித சரயு நதிக்கரையில்  அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது சீடர் பிரதீப் தாஸ், ‘  உறுதிப்படுத்தி உள்ளார்.

அயோத்தியில் உள்ள மதிப்பிற்குரிய ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், பிப்ரவரி 7, 2024 புதன்கிழமை தனது 85வது வயதில் காலமானார். அவரது மறைவு இந்து மத சமூகத்தினரையும், ராம பக்தர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆச்சார்ய 20 வயதிலிருந்து கோயிலின் தலைமை பூசாரியாக பணியாற்றி வருகிறார், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்நாளை மத சேவைக்காக அர்ப்பணித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்க்கு பிப்ரவரி 3ஆம் தேதி  அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து,  அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மருத்துவமனையில்  (SGPGI) mனுமதிக்கப்பட்டார், தொடர்ந்து அவர் பக்கவாதம்  நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளும்  பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்  நரம்பியல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்று (பிப்ரவரி 12ந்தேதி)  காலை அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளாக அயோத்தியின் ஆன்மீக மற்றும் மத நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த தலைமை பூசாரியின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், பக்தர்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்த கூடி வருகின்றனர்.

அவரது மறைவைத் தொடர்ந்து, ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடலை லக்னோவிலிருந்து அயோத்திக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அயோத்தியில் உள்ள புனித சரயு நதிக்கரையில்  அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது சீடர் பிரதீப் தாஸ், ‘  உறுதிப்படுத்தினார்.