சென்னை

ற்கனவே நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில் நடிகர் விஷால் தனது கட்சியைத் தொடங்க உள்ளார். 

அண்மையில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.  மேலும் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து உள்ளார்.

அதைப் போல் நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளார். விஷால் ஏற்கனவே அரசியல் பணிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.  ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மனு அளித்து அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆகி விட்டது.

அவர் தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார்.

மேலும் அவர் வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போது அங்குள்ள ரசிகர்களைச் சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஷால் அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விஷால் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.