சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணங்களையும் மாற்றியமைக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரால் கச்சாவிலை அதிகரித்துள்ளதால் எரி பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விலைவாசிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமையல் எண்ணை விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆட்டோவில் மீட்டர் பொருத்த வேண்டும் என்பதை அமல்படுத்தக்கோரி ராமமூர்த்தி என்பவர் தொடர் வழக்கில், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தற்போது  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில், எரிபொருட்களின் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டு என்று கூறியது.

மேலும், மீட்டர் பொருத்தியும், அதை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய, போக்கு வரத்துத்துறையும், காவல்துறையும் திடீர் சோதனை யில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.