தேர்தலில் போட்டியிட நான் திட்டமிடவே இல்லை : குஷ்பு

Must read

kushboo341-600
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதியில் 33 வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது பட்டியலை அந்தக் கட்சி மேலிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படுவர் என்று அந்தக் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழக தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெளிவுபடுத்தினார். இது குறித்து, ’’தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நான் திட்டமிடவே இல்லை. வாய்ப்பு கேட்டும் நான் விண்ணப்பிக்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்ற எதிர்பார்ப்பைவிட, ஊகங்களே அதிகளவில் இருந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பிரச்சார நடவடிக்கைகளை கட்சியின் மாநிலத் தலைமை தீவிரப்படுத்தும்’’என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article