நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது: ராஜேஷ் லக்கானி

Must read

leading-heroines-such-as-samantha-shruti-haasan-trisha-nayanthara-not-spotted-at-the-nadigar-sangam-elections-today-photos-pictures-stills
வாக்குப்பதிவு மையங்களில் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மே 16ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்போட வரும் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசையோ அல்லது அவர்கள் வந்தவுடன் நேராக சென்று வாக்களிக்கவோ அனுமதி கிடையாது.
பொதுமக்களுடன் வரிசையில் நின்றுதான் நடிகர் நடிகைகள் வாக்களிக்க வேண்டும். அதேநேரம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க தேவையில்லை. நேராக உள்ளே சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றார்.

More articles

Latest article