3 பாமக வேட்பாளர் உள்பட 2549 மனுக்கள் தள்ளுபடி

Must read

veetpu
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7,149 மனுக்களில், 2,549 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிடோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு வீட்டுவசதித் துறை தலைவராக இருந்த அதிமுகவின் ஆர்.முருகையா பாண்டியனின் வேட்புமனு ஆட்சேபனைக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த வேட்புமனு பரிசீலனை வெளி மாநிலங்களைச் சேர்ந்த 122 பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்னைகள் எழாமல் இருப்பதற்காக, இந்த பார்வையாளர்கள் தீவிரமாக அவற்றை கண்காணித்தனர். மீதமுள்ள தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 7 ஆயிரத்து 149 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 351 மனுக்களும், பெண்கள் சார்பில் 794 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவர் சார்பில் 4 மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 45 மனுக்களும், திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 16 பேரின் மனுக்களும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 149 மனுக்களில், 4 ஆயிரத்து 600 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 549 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேட்புமனுக்களில் கையெழுத்து இல்லாதது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது, முன்மொழிபவர்கள் இல்லாத நிலை, உறுதிமொழி எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல் மனுதாக்கல் செய்திருப்பது போன்ற காரணங்களால்

More articles

Latest article