சென்னை:

ரஜினியின் விளம்பர ஆர்வலர் என ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்ததற்கு சமூக வலை தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ‘‘ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறுகையில், “ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல் அரசியல் வேலையையும் பார்க்கிறார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல் சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம்’’ என்றார். ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு மற்றும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே அவ்வப்போது பதிலிடி கொடுத்து வருகிறார். இந்த வகையில் ரஜினி குறித்த கருத்துக்கும் ஜெயக்குமார் மட்டுமே பதில் கொடுத்தார்.

இவரை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டள்ளார் அதில், ‘‘ரஜினியின் விளம்பர ஆர்வலராக குருமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் பாஜகவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் பின் பெரிய அளவில் பணபலம் உள்ளது. ஊடகத்தினர் ஆடிட்டர் குருமூர்த்திய ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி என்றழைக்கின்றனர். ஆனால் அவரை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என்று அழைப்பது சிறப்பாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். ளார்.

சுப்ரமணியன் சாமி கருத்துக்கு டுவிட்டரில் பலரும் எதிர்ப்பும் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். சிலர் ஆதரித்தும் கருத்து வெளியிட்டுள்ளனர்.