கராச்சி மீதான தாக்குதல் – இந்திய கடற்படை தின வாழ்த்துக்கள்

1971 ம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்ட சமயம் மேற்கு பிராந்திய கடற்படைக்கு அப்போது ரியர் அட்மிரலாக இருந்த இ.சி. குருவில்லா தலைமை தாங்கினார்.

வங்கதேச விடுதலைக்கான போரை எதிர்பார்த்து மேற்கு பிராந்திய கடற்படையில் இருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா மற்றும் ஐ.என்.எஸ். பியாஸ் ஆகிய மூன்று கடற்படை கப்பலும் கிழக்கு பிராந்தியத்துக்கு மாற்றப்பட்டது.

ஐ.என்.எஸ். மைசூர் கடற்படை கப்பல் மீண்டும்  மேற்கு பிராந்தியத்தில் சேர்க்கப்பட்டது.

கராச்சி தாக்குதல் குழு என்று இப்போது வர்ணிக்கப்படும் குழு 4 டிசம்பர் 1971 அன்று உருவானது. ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் வித்யுத் ரக மூன்று சிறிய படகுகள் இந்த குழுவில் இடம்பெற்றது.

வித்யுத் ரக சிறிய படகு

ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட் மற்றும் ஐ.என்.எஸ். வீர் ஆகிய அந்த மூன்று படகுகளிலும் தரையில் இருந்து தரைக்கு 74 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய சோவியத் தயாரிப்பான SS-N-2B ஸ்டிக்ஸ் ஏவுகணைகள் ஒவ்வொரு படகிலும் தலா நான்கு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன.

இதற்கு பாதுகாப்பாக ஐ.என்.எஸ். கில்டன் மற்றும் ஐ.என்.எஸ். கட்ச்சல் ஆகிய இரண்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் மற்றும் படைக்குத் தேவையான தளவாடங்களுடன் ஐ.என்.எஸ். போஷக் என்ற ஒரு எரிபொருள் கப்பலுடன் கூடிய ஒரு குழு உருவானது.

இந்த தாக்குதல் குழுவுக்கு 25வது ஏவுகணை படகு படையின் கமாண்டர் பப்ரு பான் யாதவ் கமாண்டராக தலைமை தாங்கினார்.

 

நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்

திட்டமிட்டபடி டிசம்பர் 4 ம் தேதி கராச்சிக்கு தெற்க்கே 250 கடல்மைல் தொலைவில் பாகிஸ்தானின் கண்காணிப்பு வளையத்திற்கு வெளியே அன்று பகல் இந்த குழு நிலைநிறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் போர் விமானங்கள் இரவு நேர தாக்குதலில் ஈடுபட  தகுதியற்றவை என்பதால் அன்று மாலையில் தொடங்கி மறுநாள் விடிவதற்குள் ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கு இந்திய கடற்படை தயாரானது.

பாகிஸ்தான் நேரப்படி அன்று இரவு 10:30 மணிக்கு கராச்சிக்கு தெற்கே 330 கிமீ தொலைவில் சென்ற போது இந்திய கடற்படைக்கு 130 கி மீ தொலைவில் நின்றிருந்த பாகிஸ்தான் போர் கப்பல்களை தங்கள் இலக்காக கொண்டு செயல்பட்டன.

எரிபொருள் கப்பல்

முதல் தாக்குதலை வட மேற்கு திசையில் இருந்து ஐ.என்.எஸ். நிர்காட் துவக்கியது பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ். கைபர் மீது விழுந்த ஏவுகணையால் நிலைகுலைந்த கைபர், இந்திய வான்வழி தாக்குதல் என்று தவறாக எண்ணிக்கொண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை செலுத்த தொடங்கியது.

அதற்குள்ளாக கப்பலின் முக்கிய பகுதியில் தாக்கிய இந்திய ஏவுகணையால் பாகிஸ்தான் கப்பல் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதிலிருந்த வீரர்கள் தங்கள் ராணுவ தலைமையகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

“எதிரி நாட்டு விமானம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது” என்று கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பாகிஸ்தான், தாக்குதலில் சின்னாபின்னமான கைபர் கப்பலில் இருந்து சரியான தகவல்கள் கிடைக்காததால் அது இருக்கும் திசையை சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை இதனால் கப்பலை மீட்க நெடுநேரமானது.

கப்பல் இன்னமும் மிதந்து கொண்டிருப்பதாக எண்ணிய ஐ.என்.எஸ். நிர்காட் இரண்டாவது ஏவுகணையை செலுத்தியது இதனால் முற்றிலும் நாசமான கைபர் கப்பல் கடலில் மூழ்கியதில் 222 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

கராச்சியின் வடமேற்கு பகுதியில் இரவு 11.00 மணியளவில் நடந்த மற்றொரு தாக்குதலில் – MV வீனஸ் சேலஞ்சர் என்ற சரக்குக் கப்பலையும், அதற்கு பாதுகாப்பாக வந்த C-வகுப்பு நாசகாரக் கப்பலான பிஎன்எஸ் ஷாஜஹானை ஆகிய இரண்டு இலக்குகளை நோக்கி  ஐ.என்.எஸ். நிப்பட் இரண்டு ஸ்டைக்ஸ் ஏவுகணைகளை ஏவியது.

வீனஸ் சேலஞ்சர், பாகிஸ்தான் படைகளுக்கு வெடிமருந்துகளை எடுத்துச் சென்றது, ஏவுகணை தாக்கிய உடனேயே வெடித்து, இறுதியில் கராச்சிக்கு தெற்கே 23 கடல்மைல் தொலைவில் (43 km; 26 மைல்) மூழ்கியது.

நாசகார கப்பலான பிஎன்எஸ் ஷாஜஹான் மீது ஐ.என்.எஸ். நிப்பட் ஏவிய ஸ்டைக்ஸ் ஏவுகணைகளால் அது மிகவும் மோசமாக சேதமடைந்தது.

இரவு 11.20 மணிக்கு, பிஎன்எஸ் முஹாஃபிஸ் என்ற துணை-வகுப்பு கண்ணிவெடி கப்பல் ஐஎன்எஸ் வீரால் குறிவைக்கப்பட்டது. இதன் மீது வீசப்பட்ட ஏவுகணை முஹாஃபிஸ் கப்பலின் பின்புறம் இடதுபக்கம் தாக்கியது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு தகவல் தரும் முன்பே இந்த கப்பல் மூழ்கியதோடு 33 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து முன்னேறிய ஐ.என்.எஸ். நிப்பட் கராச்சி துறைமுகத்திற்கு 26 கி.மீ அருகில் சென்று கெமேரி எண்ணெய் சேமிப்பு கிடங்கை தாக்கியது.

இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன; ஒன்று தவறாக வெடித்தது, ஆனால் மற்றொன்று எண்ணெய் தொட்டிகளைத் தாக்கியது, அவை எரிந்து முற்றிலும் அழிக்கப்பட்டன, இதனால் பாகிஸ்தானின் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆபரேஷன் ட்ரைடென்ட் மற்றும் பைதான் தாக்குதலில், டிசம்பர் 8 அன்று இந்திய விமானப்படை கராச்சியின் எரிபொருள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை கான்பெர்ரா குண்டுவீச்சாளர்களால் தாக்கியது மற்றும் கராச்சி மண்டலத்தின் மொத்த எரிபொருள் தேவையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜாம்நகரில் இருந்து நான்கு விமானங்கள் மற்றும் புனேவில் இருந்து கூடுதலாக நான்கு கான்பெராஸ் விமானங்கள் கொண்ட வான்வழித் தாக்குதலை எண். 35 கான்பெர்ரா படைப்பிரிவு டிசம்பர் 8 ஆம் தேதி இரவு நடத்தியதாக ஏர் கொமடோர் பத்வார் தெளிவுபடுத்தினார் (ஏர் சீஃப் மார்ஷல் லால் பக்கத்தில் கூறியபடி டிசம்பர் 9 அல்ல அவரது வாழ்க்கை வரலாற்றின் 294)

கான்பெராஸ் விமானம் மூலம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பாடின் மற்றும் தல்ஹரின் ரேடார் நிலையங்களைத் தாக்கினர். முதல் பிரிவை வழிநடத்திய விங் கமாண்டர் பத்வார், இலக்குகளாக குறிப்பிடப்படாத அலுமினிய எண்ணெய் தொட்டிகளை கண்டதாகக் கூறினார்.

எனவே அவர் தனது 450 கிலோ எடை கொண்ட MC வெடிகுண்டுகளை நெருப்பைத் தவிர்ப்பதற்காக 7500 அடி உயரத்தில் இருந்து தொட்டிகளின் மீது வீசினார்.

இதன் விளைவாக பாகிஸ்தானின் பொருளாதாரம் முடங்கியது.

பெரும்பாலான எண்ணெய் இருப்புக்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் மற்றும் பட்டறைகள் அழிக்கப்பட்டதால் 22500 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

எரிபொருள் இழப்பால் பாகிஸ்தான் விமானப்படையும் பாதிக்கப்பட்டது.

இந்திய கடற்படை தினத்தையொட்டி மோகன் குருஸ்வாமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம்.