தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசாணை

*** ” வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தமிழக அரசுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதலாம்” என்ற அரசு ஆணையை 2017 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஓ. பி. எஸ். பிறப்பித்தார்!

இதனால், உ. பி, பீகார், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் தமிழகத்தில் மின் துறை போன்ற அரசுத் துறைகளில் பணியில் சேர்ந்தனர்!

ஒன்றிய மோடி அரசின் அடிமைகளாக இன்று வரை செயல்பட்டு வரும் ஓ. பி. எஸ் – ஈ. பி. எஸ்… ஆகிய இருவருமே கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வெளி மாநிலத்தவர்கள் இங்கே பணிபுரியத் காரணமாக இருந்தார்கள்!

ஆனால், தி. மு. க. அரசு அமைந்த சில மாதங்களிலேயே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “இனி தமிழகக் அரசுத் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்நதெடுக்கப்படும் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! ” என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்!

வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு முதல்வரின் இந்த ஆணை அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்!

அதே நேரத்தில், அ. தி மு.க ” இரண்டு அடிமைகள் ” தமிழக இளைஞர்களுக்குச் செய்த துரோகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்யும் பிராயச்சித்தம்” என்கிறார்கள் மக்கள்!

*** அண்மையில் ஒன்றிய மோடி அரசு ஜவுளித் துறையின் மூலாதாரமான நூலுக்கு வரி ஏற்றியதன் மூலமாக லட்சக் கணக்கான நெசவாளிகள் வயிற்றில் அடித்திருக்கிறது!

இதனால் ஜவுளித் துறையே ஆட்டங்கண்டு போயிருக்கிறது!

*** ஓவியர் இரா. பாரி.