பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ட்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக கூறப் பட்டது. இது குறித்து அவரிடம் ஒன்றரை வருடமாக அட்லீ பேசி வந்தார். சமீபத்தில் நடந்த சந்திப்பில் அட்லீ சொன்ன ஆக்‌ஷன் கதை ஷாருக்கிற்கு பிடித்துவிட்டது. அதில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த துப்பறியும் அதிகாரி கதையாக இது உருவாகிறது. தற்போது படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கினார் அட்லீ. வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் தீபிகா படுகோனை ஹீரோயி னாக நடிக்கிறார். இப்படத்துக்கு சங்கி என பெயரிடப்பட்டிருக்கிறதாம்.


ஏற்கனவே ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களில் ஷாருக்குடன் நடித்திருக்கும் தீபிகா நான்காவது முறையாக இப்படத் தில் இணைகிறார். 2021 ஆம் ஆண்டில் சங்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படம் மூலம் அட்லீ இந்தி யில் இயக்குனராக அறிமுகமாகிறார்.