பழைய 500, 1000 நோட்டுக்களை கண்டாலே மக்கள் அலறி தெறித்து ஓடும் இவ்வேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி பெற்றோர்களை செல்லாத நோட்டில் பள்ளிக் கட்டணத்தை கட்டச் சொல்லி அழைக்கிறது!

ves

பெங்களூரு மகதி ரோட்டில் உள்ள வி.இ.எஸ் மாடல் கான்வெண்ட் என்ற பள்ளி கடந்த நவம்பர் 24-அன்று தங்கள் மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையை பார்த்து பெற்றோர்கள் வியப்ப்பில் ஆழந்தனர். அந்த சுற்றறிக்கையில் சொல்லப்பட்ட விபரம் இதுதான்:
“பெற்றொர்களே உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! 10-ஆம் வகுப்பு வரை உங்கள் பிள்ளைகளில் வருங்கால படிப்புக்கான கட்டணத்தை நீங்கள் இப்போதே கட்டலாம். செல்லாது என்று அரசு அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்! அதுமட்டுமல்ல ஆர்வத்துடன் முன்வரும் பெற்றோர்களுக்கு தள்ளுபடி சலுகையும் உண்டு!”
இப்படிக்கு
பள்ளி நிர்வாகம்
எதற்காக இந்த பெரும் தியாகத்தை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் அளித்த பதில் “பாவம் பெற்றோர்கள் நீண்ட கியூகளில் கால்கடுக்க நின்று அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதோ எங்களாலான உதவி!” என்பதாகும்.
ஆனால் பலர் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். இது கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பள்ளி நிர்வாகம் செய்யும் முயற்சி என்று அவர்கள் சந்தேகிக்கிறனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.