கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் பஞ்சாப் மாநிலம் பதேகாரில் உள்ள ஒரு குருதுவாராவில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அவர் பிரிட்டிஷ் மொரீஷியன் மாடல் ஹசெல் கேச் என்பவரை காதல் மணம் புரியவிருக்கிறார். ஆனால் அவரது திருமணத்தில் அவரது தந்தை யோகராஜ் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிகிறது.

yograj

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாபி நடிகருமான யோகராஜ், தன் மகன் யுவராஜின் திருமணம் மத குருமார்கள் முன்னிலையில் நடப்பதை தான் விரும்பவில்லை என்றும் தனக்கு கடவுள் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது, மதகுருக்கள் மீது அல்ல. எனவே நான் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை. அதற்கு பதிலாக திருமணத்துக்கு முந்தையநாள் ஓட்டலில் நடக்கும் மெஹந்தி விழாவில் கலந்து கொள்ளுவேன். எனது மகனிடமிருந்து (யுவராஜ்) அதற்கு அன்பான அழைப்பு வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

yvimother

தாயாருடன் பொற்கோவிலில் யுவராஜ்சிங்

யுவராஜின் தந்தை யோகராஜ் தனது மனைவி ஷப்னத்தை விவாகரத்து செய்து விட்டார். யுவராஜ் தனது தாயுடன் தங்கியிருக்க முடிவுசெய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவி ஷப்னத்திடம் நிறைய பணம் இருப்பதாகவும் எனவே தனது மகனது திருமணத்தை எப்படி நடத்துவது என்று அவர் முடிவுசெய்வார் என்றும் தெரிவித்த யோகராஜ், பணத்தை பார்த்து ஜாக்கிரதையாக செலவிடும்படி தனது முன்னாள் மனைவிக்கு அறிவுரை வழங்கிருக்கிறார்.
தனது மருமகளை தேவதை என்று புகழும் யோகராஜ், ஹசெல் வெளிநாட்டில் வளர்ந்திருந்தாலும் இந்திய பாரம்பரியத்தில் வேரூன்றியவர் என்று குறிப்பிட்டார்.